வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும்

வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என ஆளுநர் செயலகம் தெரிவித்துள்ளது.

நாளையதினம்(21) பாடசாலை விடுமுறை தினமா என்று கேள்வி மாணவர்கள் மத்தியிலும் ஆசிரியர் எழுந்துள்ளது.

இதனால் மாணவர்களும் ஆசிரியர்களும் குழப்ப நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தை தொடர்புகொண்டு வினவியவேளை, நாளையதினம் வடக்கில் உள்ள அனைத்து பாடசாலைகளும் வழமை போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.