வடக்குக்கான புகையிரதச் சேவைகள் எதிர்வரும்- 09 ஆம் திகதி வியாழக்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாணப் புகையிரத நிலையப் பொறுப்பதிகாரி தி.பிரதீபன் தெரிவித்துள்ளார்.
மஹவ முதல் ஓமந்தை வரையிலான புகையிரதப் பாதையில் ஐந்து புகையிரதப் பாலங்களை மாற்றியமைக்கவும், யானைகள் கடந்து செல்வதற்காக அமைக்கப்பட்ட சுரங்கப் பாதையைப் புனரமைக்கும் பணிகளை மேற்கொள்வதற்கும் ஏதுவாக வடக்குக்கான புகையிரதச் சேவைகள் கடந்த ஜனவரி மாதம்- 26 ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இந் நிலையில் தமிழ்- சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும்-09 ஆம் திகதி தொடக்கம் புகையிரதச் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன புகையிரதச் சேவைகளுக்கான முற் பதிவுகள் சனிக்கிழமை (04.04.2026) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமையால் பயணிகள் தமக்கான முற் பதிவுகளை மேற்கொள்ள முடியுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.





