வருமானச் சான்றிதழ் மோசடியில் ஓய்வுபெற்ற கிராம அலுவலர் கைது !

இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால், ஓய்வு பெற்ற கிராம அலுவலர் ஒருவர் திங்கட்கிழமை (30) கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்த அதிகாரி, தனது உத்தியோகபூர்வ நிலையை தவறாக பயன்படுத்தி, அதிக வருமானம் கொண்ட நபர்களுக்கு வேளாண்மைத் திட்டத்தின் கீழ் அரச நிலங்களை வழங்க உதவும் வகையில் போலியான வருமானச் சான்றிதழ் ஒன்றை வழங்கியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையின் காரணமாக அரசுக்கு 10,625,000 ரூபா அளவிலான நிதி இழப்பு ஏற்பட்டதுடன், வெளிப்புற நபருக்கு சட்டவிரோத நன்மை கிடைத்துள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டதையடுத்து கொழும்பு பிதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.