வவுனியாவில் இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவருக்கு உதவிக் கரம் நீட்டிய சந்நிதியான் ஆச்சிரமம்

வவுனியா இலுப்பைக்குளம் பகுதியைச் சேர்ந்த இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட இளம் குடும்பத் தலைவருக்கு  மாற்று அறுவைச் சிகிச்சை முன்னெடுப்பதற்காக ஒரு பகுதி நிதியாக 75 ஆயிரம் ரூபா சந்நிதியான் ஆச்சிரம நிர்வாகத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (08.02.2026) பிற்பகல் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் மோகனதாஸ் சுவாமிகள் ஆச்சிரமத் தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று இந்த நிதி உதவியை வழங்கி வைத்தார்.