காலி – அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் கஞ்சா பயிர்ச்செய்கையில் ஈடுபட்ட வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர் பெலாரஸ் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
இவர் அக்மீமன பிரதேசத்தில் உள்ள வீடொன்றை வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டு இரண்டு அறைகளில் மிகவும் சூட்சுமமான முறையில் கஞ்சா பயிர்ச்செய்கையை மேற்கொண்டு வந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்யும் நோக்கத்தில் கஞ்சா பயிர்களை பயிரிட்டு வந்துள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வீடு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கு சொந்தமானது எனவும் சந்தேக நபரான வெளிநாட்டுப் பிரஜை இந்த வீட்டை 150,000 ரூபா மாதாந்த வாடகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.