யாழ்ப்பாணம் அரியாலை செம்மணி வளைவுப் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி ஞாயிற்றுக்கிழமை (07.12.2025) விஷமிகளால் மீண்டும் அடித்து உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளது.
அணையா விளக்குப் போராட்ட நினைவுத் தூபி கடந்த ஒக்ரோபர் மாதம்- 08 ஆம் திகதி இரவோடிரவாக விஷமிகளால் அடித்து உடைத்துக் கடுமையாகச் சேதமாக்கப்பட்ட நிலையில் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு அன்றைய தினமே நினைவுத் தூபி மீளவும் அதே இடத்தில் மக்கள் செயல் தன்னார்வ அமைப்பினரால் முன்னரை விட வலிமை கொண்டதாக மீளவும் நிறுவப்பட்டுள்ளது. குறித்த நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டமை தொடர்பில் பல்வேறு தரப்பினரும் பெரும் விசனம் வெளியிட்டுள்ளனர்.






