யாழ்.மாநகர சபையின் உறுப்பினரொருவர் நேற்றுத் திங்கட்கிழமை (08.12.2025) அரசடி வீதியையும், அம்மன் வீதியையும் இணைக்கும் வீதியான கந்தபுராண வீதியில் பொது இடத்தில் கழிவுகளைக் வீசிச் செல்ல முற்பட்ட போது அப் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களாலும், மக்களாலும் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
இவர் யாழ்.மாநகர சபையின் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியின் உறுப்பினரெனத் தெரியவருகிறது. மோட்டார்ச் சைக்கிளில் உரப்பைக்குள் கொண்டு வந்த கழிவுகளை வீசி விட்டுச் செல்ல முற்பட்ட போதே குறித்த மாநகரசபை உறுப்பினர் இளைஞர்கள், மக்களாலும் நையப்புடைப்பக்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார். குறித் த உறுப்பினரின் பொறுப்பற்ற செயற்பாடு தொடர்பில் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.





