வைத்தியர் மீது தாக்குதல் நடத்திய முச்சக்கரவண்டி சாரதி !

பதுளை போதனா வைத்தியசாலையில் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் வைத்தியர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தன்று, பதுளை போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் காருக்கு பின்னார் முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்துள்ளது.

இதன்போது வைத்தியர், முச்சக்கரவண்டியை எடுக்குமாறு சாரதியிடம் கூறியள்ளார்.

இதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி,  வைத்தியரை பலமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார். தாக்குதலில் காயமடைந்த வைத்தியர் பதுளை போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் சிலர் இன்று புதன்கிழமை (17)ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் இன்று மாலை 04.00 மணி வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.