நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையினால் 11 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
முதலாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;
- கண்டி மாவட்டம் : உடுநுவர, உடுதும்பர
- கேகாலை மாவட்டம் : புலத்கொஸுபிட்டிய, யட்டியந்தோட்டை
- மாத்தளை மாவட்டம் : பல்லேபொல, அம்பகஸ்கோரலய
இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் ;
- பதுளை : ஹல்தும்முல்ல, ஊவாபரணகம
- காலி : நெலுவ
- கம்பஹா : அத்தனகல்ல
- கண்டி : தெல்தொட்ட, தொலுவ
- கேகாலை : மாவனெல்லை, ருவன்வெல்ல, அரநாயக்க, ரம்புக்கனை