எதிர்வரும்- 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானிலை சீரான நிலைமையில் காணப்படும். எனினும், ஒரு சில பகுதிகளில் அவ்வப்போது மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல்துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
அத்துடன் தற்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளிலும் நிலவுகின்ற குளிரான வளிமண்டல நிலைமை எதிர்வரும்- 16 ஆம் திகதி வரை தொடருமென எதிர்பார்க்கப்படுகின்றது. ஆகவே, மக்கள் இதுதொடர்பாகவும் விழிப்பாகவிருப்பது அவசியம்.
அதேபோல மத்திய, ஊவா, சப்ரகமுவ, தெற்கு மற்றும் மேற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை கிடைக்கும் சாத்தியமுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.



