1,740 கிலோ பீடி இலைகள் சிலாபம் கடற்படையினரால் கைப்பற்றல்!

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட சுமார் 1,740 கிலோகிராம் பீடி இலைகளை சிலாபம் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்படையினர், கடந்த 10ஆம் திகதி சிலாபம் கடற்பகுதியில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்போது, கடற்படையால் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்தில் உள்ள சுங்கத் தடுப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.