20 ஆம் திகதி வரை வடக்கு- கிழக்கில் மழை!

வெப்பச்சலனச்  செயற்பாடு மற்றும் கிழக்குத் திசைக் காற்று முறிவின் காரணமாகப் புதன்கிழமை (18.03.2026) முதல் எதிர்வரும்- 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கும் அவ்வப்போது மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவர் பேராசிரியர்.நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் செவ்வாய்க்கிழமை (17.03.2026) இரவு மேலும் தெரிவித்துள்ளதாவது,  
குறிப்பாக கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளுக்கு கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இது வெப்பச் சலன செயற்பாட்டினால் கிடைக்கும் மழை என்பதனால் இடியுடன் கூடிய மழையாகவே கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆகவே, இடி, மின்னல்கள் தொடர்பில் மக்கள் அவதானமாகவிருப்பது அவசியம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்