350 வகையான மருந்துகளுக்கு கடுமையான விலைக் கட்டுப்பாடுகள் மற்றும் விதிமுறைகளை விதிக்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
நுகர்வோர் நியாயமான விலையில் மருந்துகளைப் பெற உதவும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, அவர் மேலும் கருத்துவெளியிடுகையில்,
இந்த புதிய நடவடிக்கை நாட்டின் மருந்து விநியோகத்துறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்துமென எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, சந்தையில் தற்போது கிடைக்கும் பல மருந்துகளின் விலைகளைக் கணிசமாகக் குறைக்க உதவியுள்ளது. அதேநேரம், நியாயமற்ற இலாபத்தை கட்டுப்படுத்தவும் தன்னிச்சையான விலை உயர்வுகளைத் தடுக்கவும் உதவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்தியாவசிய மருந்துகள் பொதுமக்களுக்கு எளிதாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக மருந்து வர்த்தகம் கண்காணிக்கப்படும்.
அதன்படி, இந்த விலைக் கட்டுப்பாட்டு வழிமுறை நாட்டின் மருந்துக் கொள்கையை வலுப்படுத்துவதில் முக்கியமான ஒரு படியாகும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.



