உதகையில் தோடர் பழங்குடியினர் கோயில் கும்பாபிஷேக திருவிழா: பாரம்பரிய நடனமாடி வழிபாடு

ஊட்டி அருகே உள்ள தோடர் பழங்​குடி​யின மக்​களின் கோயி​லில், நார்​ஸ்​னர்ஸ் எனப்​படும் கும்​பாபிஷேக திரு​விழா நடை​பெற்​றது. 30 ஆண்​டு​களுக்கு பின் நடை​பெற்ற இத்​திரு​விழா​வில், 60-க்​கும் மேற்​பட்ட கிராமங்​களை சார்ந்த நூற்​றுக்​கணக்​கான தோடர் பழங்​குடி​யின மக்​கள் பங்​கேற்​றனர்.

நீல​கிரி மாவட்​டத்​தில் தோடர், கோத்​தர், இருளர், குறும்​பர், காட்டு நாயக்​கர், பணி​யர் ஆகிய ஆறு வகை​யான பண்​டைய பழங்​குடி​யின மக்​கள் வசித்து வரு​கின்​றனர்.

இதில் தோடர் பழங்​குடி​யின மக்​கள் மந்து என்று அழைக்​கப்​படும் கிராமங்​களில் வசித்து தனி கலாச்​சா​ரத்தை கடைப்​பிடித்து வாழ்ந்து வரு​கின்​றனர். ஊட்டி அருகே உள்ள மார்​லி மந்​தில் 10-க்​கும் மேற்​பட்ட தோடர் பழங்​குடி​யின குடும்​பங்​கள் வாழ்ந்து வரு​கின்​றனர்.

இவர்​கள் 1952ம் ஆண்டு பாரம்​பரிய முறைப்படி புல், மூங்​கில் மற்​றும் பிரம்பு ஆகிய​வறை கொண்டு பிறை வடிவி​லான கோயிலை உரு​வாக்கி வழிபட்டு வரு​கின்​றனர். 74 ஆண்​டு​கள் பழமை​யான இந்த கோயி​லின் கூரை மற்​றும் நுழை​வா​யில் பகுதி 30 ஆண்​டு​களாக மாற்​றப்​ப​டா​மல் இருந்து வந்​தது.

இக்​கோயி​லின் கூரை மற்​றும் நுழைவு​வா​யில் பகு​தியை மாற்ற தோடர் பழங்​குடி​யினர் முடிவு செய்​தனர். இதனையடுத்து ஆண்​கள் அனை​வரும் விரதம் மேற்​கொண்டு அப்​பர் பவானி மற்​றும் கோரகுந்தா வன பகு​தி​களுக்கு சென்று அவ்​வுல் என்ற புற்​கள், மூங்​கில் மற்​றும் பிரம்பு போன்ற பொருட்​களை கொண்டு வந்து கடந்த இரண்டு மாதங்​களாக புதுப்​பிக்​கும் பணி​களை மேற்​கொண்டு வந்​தனர்.

கோயி​லின் கூரையை மாற்றி புதிய புற்​கள் வேயப்பட்டு நுழைவு​வா​யில் பகுதி பழமை மாறாமல் வடிவ​மைக்​கபட்​டது. இப்​பணி​கள் நிறைவடைந்த நிலை​யில், நார்​ஸ்​னர்ஸ் எனபடும் கும்​பாபிஷேக திரு​விழா நேற்று முன்​தினம் மாலை நடந்​தது.

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள 60-க்​கும் மேற்​பட்ட மந்​துகளை சேர்ந்த தோடர் பழங்​குடி​யின ஆண்​கள் தங்​களது பாரம்​பரிய உடை​யுடன் கும்​பாபிஷேக விழா​வில் பங்​கேற்​று, பாடல்​களைப் பாடி, காணிக்கை செலுத்தி சிறப்பு வழி​பாடு செய்​தனர்.

தொடர்ந்​து, தோடர் பழங்​குடி​யின ஆண்​கள்​ கோயில்​ முன்​ வட்​ட​மாக நின்​று, கைகளைக்​ கோர்​த்​த​வாறு கலாச்​​சா​ர நடன​மாடினர்​.