உயர் நீதிமன்ற கூடுதல் வளாகத்தில் மார்ச் 2 முதல் நீதிமன்ற பணிகள் தொடங்கும்

சென்னை உயர் நீதி​மன்ற கூடு​தல் வளாகத்​தில், வரும் மார்ச் 2-ம் தேதிமுதல் நீதி​மன்​றங்​கள் தனது அன்​றாடப் பணி​களைத் தொடங்​கும் என, உயர் நீதி​மன்ற பதிவுத் துறை அறி​வித்​துள்​ளது.

சென்னை உயர் நீதி​மன்ற வளாகத்​தில் பழைய சட்​டக்கல்​லூரி இயங்கி வந்த பழமை​யான பாரம்​பரிய கட்​டிடம் பல கோடி ரூபாய் செல​வில் சீரமைக்​கப்​பட்டு உயர் நீதி​மன்​றத்​தின் கூடு​தல் கட்​டிட​மாக கடந்​தாண்டு இறு​தி​யில் திறக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில், இந்த கூடு​தல் கட்​டிடத்​தில் நீண்ட கால​மாக நிலு​வை​யில் உள்ள பழைய சிவில், குற்​ற​வியல் மற்​றும் ரிட் வழக்​கு​களின் இறுதி விசா​ரணைக்​கான வழக்​கு​கள் விசா​ரிக்​கப்​பட​வுள்​ளது.

அதன்​படி, கூடு​தல் கட்​டிடத்​தில் உள்ள நீதி​மன்​றங்​கள் தனது அன்​றாடப் பணியை வரும் மார்ச் 2-ம் தேதி முதல் தொடங்​கும் என உயர் நீதி​மன்ற பதிவுத் துறை அறிவித்துள்ளது.