வேலூர் காட்பாடியை அடுத்த தொண்டான்துளசி கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வான ரகுபதி மகன் டி.ஆர்.முரளி. இவர் சில நாட்களுக்கு முன்பு வரை ஒ.பன்னீர் செல்வம் அணியில் மாவட்ட செயலாளராக இருந்தார்.
தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் இணைந்ததை தொடர்ந்து அவருடன் இருந்து டி.ஆர்.முரளி விலகினார்.இந்த நிலையில், கரசமங்கலம் கிராமம் ரகுபதி நகரில் சமத்துவத்தை வலியுறுத்தும் வகையில் மும்மத அடையாளங்களுடன் ரூ.3 கோடியில் எம்.ஜி.ஆருக்கு கோவில் ஒன்றை டி.ஆர்.முரளி கட்டியுள்ளார்.
அதில் சுமார் 5 அடி உயரத்துக்கு ‘தனிப்பிறவி’ படத்தில் முருகர் வேடத்தில் வரும் எம்.ஜி.ஆர். போன்று அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.முன்பகுதியில் எம்.ஜி.ஆர். மூன்று மதத்தில் இருப்பது போன்று சிலை வைக்கப்பட உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.மேலும் எம்.ஜி.ஆர் பாடல்களை தொகுத்து அதை திருக்குறள் வடிவில் 48 நாள் மண்டல பூஜை முடிந்து வெளியிடப்பட உள்ளது.




