சட்டசபையில் நல்லகண்ணு, பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்..

தமிழக சட்டசபை இன்று கூடியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவித்து, இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. .இரங்கல் தீர்மானம்அதன்படி, முன்னாள் உறுப்பினர்கள் சி.ராமசுவாமி, தா.வீராசாமி, சி.சுவாமிநாதன், அ.க.ஆறுமுகம், பெ.கண்ணன், அ.நாஞ்சில் முருகேசன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, சட்டசபை முன்னாள் செயலாளர் சி.கு.ராமசாமி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே.ராஜன், பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டன.