சரும பொலிவு சிகிச்சைகளை மருத்துவர் அல்லாதோர் செய்தால் நடவடிக்கை

அண்ணா நகர் பகுதியில் மிஸ்​டர் ஹேர் என்ற பெயரில் சிகை சீரமைப்பு சிகிச்சை மையம் இயங்கி வந்​தது. அங்​கு, போலி மருத்துவர்கள் மூலம் முடி மாற்று சிகிச்​சைகள் மேற்​கொள்​வது கண்​டறியப்​பட்​ட​தால், 3 பேர் கைது செய்​யப்​பட்​டனர். அந்த சிகிச்சை மையத்​துக்கு சுகா​தா​ரத் ​துறை அதி​காரி​கள் சீல் வைத்​தனர்.

படித்த இளைஞர்​களும், பெண்​களுமே இத்​தகைய மோசடிகளால் அதி​கம் பாதிக்​கப்​படு​வ​தால், தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் (என்​எம்​சி) வழி​காட்​டு​தல்​களை மேற்​கோள் காட்டி மாநில மருத்​துவ கவுன்​சில் பதி​வாளர் வெளி​யிட்ட அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: முடி மாற்று சிகிச்​சைகள் மற்​றும் சரும பொலிவுக்​கான ஒழுங்​கு​முறைப்​படுத்​தப்​பட்ட வழி​காட்​டு​தல்​களை கடந்த 2022-ல் தேசிய மருத்​துவ ஆணை​யத்​தின் நெறி​சார் குழு தெளி​வாக வெளி​யிட்​டுள்​ளது.

மத்​திய சுகா​தார சேவை​களுக்​கான தலைமை இயக்​குநரகம் சார்​பிலும், இத்​தகைய சிகிச்​சைகளுக்கு குறைந்​த​பட்ச தரநிலைகள் நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளன.

அதனை பின்​பற்றி தமிழ்​நாடு மருத்​துவ கவுன்​சிலும் சில அறி​வுறுத்​தல்​களை வெளி​யிடு​கிறது. அதன்​படி, முடி மாற்று சிகிச்சை மற்​றும் லேசர் நுட்​பத்​திலான தோல் சிகிச்​சைகளை மருத்​துவ கவுன்​சிலில் பதிவு செய்த அங்​கீரிக்​கப்​பட்ட மருத்துவர்கள் மட்​டுமே மேற்​கொள்ள வேண்​டும்.

மருத்​துவ நிறு​வனங்​கள் பதிவு சட்​டத்​தின் கீழ் உரிமம் பெற்ற மையங்​களில் மட்​டுமே அத்​தகைய சிகிச்​சைகள் வழங்​கப்பட வேண்​டும். உரிய பாது​காப்பு வழி​காட்​டு​தல்​களை பின்​பற்​று​வது கட்​டா​யம் ஆகும்.

அங்​கீகரிக்​கப்​பட்ட மருத்​துவ தகு​தி​கள் இல்​லாமல் விதி​களுக்கு புறம்​பாக சிகிச்​சைகள் வழங்​கு​வது கண்​டறியப்​பட்​டால், சம்​பந்​தப்​பட்ட நபர் மற்​றும் நிறு​வனம் மீது கடுமை​யான சட்ட நடவடிக்கை எடுக்​கப்​படும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.