செங்கை மாவட்ட கிராம ஊராட்சிகளில் பராமரிப்பின்றி காணப்படும் உறிஞ்சிக்குழிகள்

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் கிராமப்​பகு​தி​களில் வெளி​யேறும் கழி​வுநீரை சுத்​தி​கரித்து வெளி​யேற்​றும் உறிஞ்சிக்குழிகள் பராமரிப்​பின்றி பாழானதோடு, புதர்​மண்​டி​ உள்ளது. சரி​யாக பராமரிக்​காமல் விட்​ட​தால் அவை அமைத்​ததன் நோக்​கம் சிதைந்து வரு​கிறது.

மாவட்ட ஆட்​சி​யர் இவ்விவகாரத்தில் தலை​யிட்டு தீர்வு காண கோரிக்கை எழுந்​துள்​ளது. 2021-22ம் நிதி​யாண்​டில் அனைத்து கிராமங்​களை​யும் சுகா​தா​ரத்​தில் முன்​மா​திரி​யாக மாற்ற 15வது நிதிக்​குழு​மத்​தில் 30 சதவீத நிதி சுகா​தா​ரத்​திற்​காகவே ஒதுக்​கப்​பட்​டது.

இந்​நிலை​யில் தமிழகம் முழு​வதும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் ஊராட்​சிகளில் கால்​வாய் மூலம் வெளி​யேறும் கழி​வுநீரை சுத்​தி​கரிக்க உறிஞ்​சிக்​குழி அமைத்து நன்​னீ​ராக்க திட்​ட​மிடப்​பட்​டது. இதன்​படி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் பல்​வேறு ஊராட்​சிகளில் உறிஞ்சிக்குழிகள் அமைக்​கப்​பட்​டன.

பார்ப்​ப​தற்கு கால்​நடை குடிநீர் தொட்​டிகளைப் போன்று இருக்​கும் இவை, ஊரின் எல்​லை​யிலோ அல்​லது தெரு​வின் கடைசி பகு​தி​யிலோ அமைக்​கப்​பட்​டிருக்​கும்.

இந்த கிடைமட்ட உறிஞ்​சிக்​குழி​யில் முதல் அடுக்​கில் ஜல்லி கற்​கள், 2-வது அடுக்​கில் கிராவல், மூன்​றாவது அடுக்​கில் கரி, 4-வது அடுக்​கில் மணல், மீண்​டும் அடுக்​கில் அமைத்து போல் ஜல்லி அமைக்க வேண்​டும்.

இந்த சுத்​தி​கரிப்பு முறை​யால் முதல் அடுக்​கில் நுழை​யும் கழி​வுநீர் மண் துகள்​கள் பிரித்​தெடுக்​கப்​படு​கிறது. 2-வது அடுக்​கான கிராவலில் இருந்து வெளி​யேறும் போது கருமை நிறம் குறை​கிறது.

3-வது அடுக்​கான கரி​யில் இருந்து சுத்​தி​கரிக்​கப்​படு​வ​தால் நீர் தூய்மை அடைகிறது. இறு​தி​யாக வெளி​யேறும் போது தெளிந்த நீராகும். இத்​திட்​டம் செங்கை மாவட்​டத்​தில் பல்​வேறு ஊராட்​சிகளில் தற்​போது செயல்​ப​டா​மல் முடங்கி கிடக்​கிறது.

அமைத்த நாள் முதல் இதை பராமரிக்க உள்​ளாட்​சிகள் கண்டு கொள்​ளவே இல்​லை. கால்​வாய்​கள் உறிஞ்​சிக்​குழியோடு இணை​யுமிடத்தை வாரம் ஒரு முறை சுத்​தம் செயய வேண்​டும்.

அதை​யும் செய்​ய​வில்​லை. இதனால் அமைக்​கப்​பட்ட உறிஞ்​சிக்​குழிகள் செயல்​ப​டா​மல் புதர்​மண்டி கிடக்​கின்​றன. இத்​திட்​டம் மண்​வளம், நீர்​வளத்தை பாது​காக்​கும் என கூறப்​பட்ட நிலை​யில், தற்​போது மக்​கள் வரிப்​பணத்தை வீணாக்​கி, சிதில​மாகி வரு​கிறது.

ஆனால் சீரமைப்பு செய்​வ​தாக சிறிய தொகை செலவு செய்து பெரிய தொகையை செலவு செய்​தது போல் கணக்கு காண்​பிக்​கப்​பட்டு வரு​கிறது. இதில் பெரிய அளவில் ஊழல் நடை​பெற்​றுள்​ள​தாக சமூக ஆர்​வலர்​கள் குற்​றம்​சாட்​டு​கின்​றனர்.

வண்​டலூரை சேர்ந்த சமூக ஆர்​வலர் குமரன் கூறியது: கிராமங்​களில் வீடு​களில் இருந்து வெளி​யேறும் கழிவு நேரடி​யாக ஏரி​யில் கலப்பதை தடுப்​ப​தற்​காக உறிஞ்சி குழிகள் அமைக்​கப்​பட்​டது. சிறப்​பான திட்​டம் என்​றாலும் ஊராட்சி நிர்​வாகங்​கள் இதனை சரிவர பராமரிக்​க​வில்​லை.