சென்னையில் 4 நாட்கள் அண்ணாமலை நடைபயணம்

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமநாதபுரத்தில் நடைபயணத்தை தொடங்குகிறார். இதைதொடர்ந்து ஜூலை 30-ந்தேதி முதுகுளத்தூர், பரமக்குடி, திருவாடனை, சிவகங்கையில் நடைபயணம் மேற்கொள்கிறார்.

அவர் ஆகஸ்ட் 1-ந்தேதி மானாமதுரையிலும், 2-ந்தேதி ஆலங்குடியிலும் நடைபயணம் மேற்கொள்ளும் அண்ணாமலை ஆகஸ்ட் 5-ந்தேதி மதுரைக்கு செல்கிறார். 9-ந்தேதி திருச்சி செல்லும் அவர், 13-ந்தேதி தூத்துக்குடியிலும், 14-ந்தேதி திருச்செந்தூரிலும், 15-ந்தேதி கன்னியாகுமரியிலும் நடைபயணம் சென்று மக்களை சந்திக்கிறார்.

ஆகஸ்ட் 20-ந்தேதி நெல்லையிலும், 31-ந்தேதி தென்காசியிலும் நடைபயணம் மேற்கொள்கிறார். செப்டம்பர் மாதம் 1-ந்தேதி சங்கரன்கோவிலில் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் 9-ந்தேதி பழனிக்கும், 13-ந்தேதி கோவைக்கும் செல்கிறார். ஈரோட்டில் செப்டம்பர் 21-ந்தேதியும், கரூரில் அக்டோபர் 9-ந்தேதியும், திருச்சியில் 11-ந்தேதியும் நடைபயணம் மேற்கொள்ளும் அவர் அக்டோபர் இறுதியில் சீர்காழியில் நடைபயணம் செல்கிறார்.