சென்னை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய 200 பேருக்கு 10 ஆண்டாக ஓய்வூதிய பலன் ரூ.95 கோடி நிலுவை

சென்னை பல்​கலைக்​கழகத்​தில் பணி​யாற்றி ஓய்வு பெற்ற 200-க்​கும் மேற்​பட்​ட​வர்​களுக்கு கடந்த 10 ஆண்​டு​களாக வழங்​கப்​ப​டா​மல் உள்ள ஓய்​வூ​திய நிலு​வைத் தொகை ரூ.95.44 கோடி எப்​போது விடுவிக்​கப்​படும் என்​பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் ஆஜராகி விளக்​கமளிக்க உயர் நீதி​மன்ற நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் உத்​தர​விட்​டுள்​ளார்.

சென்னை பல்​கலைக்​கழகத்​தில் மேலாண்மை துறைத் தலை​வ​ராக பணி​யாற்றி 2020-ல் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஆர்​.தேன்​மொழி ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க உத்​தர​விடக்கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார்.

இதையடுத்​து, அவரது ஓய்​வூ​திய பணப் பலன்​களை 4 வாரத்​துக்​குள் வழங்​கு​மாறு தமிழக அரசுக்​கும், சென்னை பல்​கலைக்கழக நிர்​வாகத்​துக்​கும் நீதிபதி என்​.ஆனந்த் வெங்​கடேஷ் கடந்த 2024 அக்​.30-ல் உத்​தர​விட்​டார்.

அந்த உத்​தரவை அரசு செயல்​படுத்​த​வில்லை என்று கூறி, தமிழக நிதித் துறை செயல​ரான ஐஏஎஸ் அதி​காரி உதயச்​சந்​திரன், சென்னை பல்​கலைக்​கழக பதி​வாளர் எஸ்​.ஏழு​மலை ஆகியோ​ருக்கு எதி​ராக தேன்​மொழி அவம​திப்பு வழக்கு தொடந்​தார்.

நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் முன்பு இந்த வழக்கு விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் டி.​கார்த்​திக் நாத்,“மனு​தா​ரரின் ஓய்​வூ​திய பணப் பலன் ரூ.64 லட்​சம் இது​வரை வழங்​கப்பட​வில்​லை.

இதே​போல சென்னை பல்​கலைக்​கழகத்​தில் 200-க்​கும் மேற்​பட்​டோருக்கு பல ஆண்​டு​களாக ஓய்​வூ​திய பணப் பலன்​கள் வழங்​கப்​பட​வில்​லை’’ என்று குற்​றம் சாட்​டி​னார். இதுதொடர்​பாக விரி​வான அறிக்கை தாக்​கல் செய்​யு​மாறு சென்னை பல்​கலைக்​கழகம் மற்​றும் தமிழக அரசுக்கு நீதிபதி உத்​தர​விட்​டார்.

கடந்த மாதம் இந்த வழக்கு மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. பல்​கலைக்​கழக பதி​வாளர் தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட அறிக்​கை​யில், ‘மனு​தா​ரருக்கு ரூ.64 லட்​சம் வழங்​கப்​பட்​டு​விட்​டது.

கடந்த 2015 முதல் 2025 டிசம்​பர் 1-ம் தேதி வரை கடந்த 10 ஆண்​டு​களில் ஓய்வு பெற்ற 87 பேராசிரியர்​களுக்கு ரூ.42.19 கோடி, 129 ஆசிரியர் அல்​லாத பணி​யாளர்​களுக்கு ரூ.46.50 கோடி, குடும்ப ஓய்​வூ​தி​ய​மாக ரூ.6.74 கோடி என மொத்​தம் ரூ.95.44 கோடி ஓய்​வூ​தி​யப் பலன்​கள் நிலு​வை​யில் உள்​ளது.

இதை விடுவிக்க அரசிடம் அனு​மதி கோரப்​பட்​டுள்​ளது’ என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. ‘தமிழக அரசு தரப்​பில் தாக்​கல் செய்​யப்​பட்ட அறிக்​கை​யில், ‘தன்​னாட்சி நிறு​வன​மான சென்னை பல்​கலைக்​கழகத்​தில் கடந்த ஜூன் மாத நில​வரப்​படி மொத்​தம் ரூ.318 கோடி கார்​பஸ் நிதி இருப்பு உள்​ளது.

சென்னை பல்​கலைக்​கழகம் தனது ஆசிரியர்​களுக்கு சம்​பளம், ஓய்​வூ​தி​யப் பலன்​களை வழங்க தமிழக அரசின் நிதி​யுத​வியை​யும் எதிர்​பார்க்​கிறது. அதை கருத்​தில் கொண்​டு, பல்​வேறு நிதிச் சுமை​களுக்கு இடையே சென்னை பல்​கலைக்​கழகத்​தில் ஓய்வு பெற்​றவர்​களுக்​கான ஓய்​வூ​திய பணப் பலன்​களை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வரு​கிறது’ என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதையடுத்​து, நீதிபதி ஆனந்த் வெங்​கடேஷ் கூறிய​தாவது: ரூ.95.44 கோடி ஓய்​வூ​தி​யம் நிலு​வை​யில் உள்​ளது என்ற அறிக்கை அதிர்ச்​சி​யளிக்​கிறது. கல்வி நிலை​யங்​களி​லும், அரசுக்​காக​வும் வாழ்​நாளை அர்ப்​பணிக்​கும் ஊழியர்​கள், அலு​வலர்​கள் ஓய்வு பெற்​று​விட்​டால், அதன்​பிறகு அவர்​களை யாரும் கண்​டு​கொள்​வது கிடை​யாது.

ஓய்​வுக்கு பிறகு இது​ போன்ற பணப்​பலன்​கள்​தான் அவர்​களது வாழ்​வா​தா​ரம் என்​பதை அரசு இயந்​திரம் மறந்​து​விடு​கிறது.

இந்த தொகையை எப்​படி, எப்​போது வழங்​கப் போகிறோம் என்​பது குறித்து தமிழக நிதித் துறை செயலர் டி.உதயச்​சந்​திரன் நேரில் ஆஜராகி தெரிவிக்க வேண்​டும். இவ்​வாறு உத்​தர​விட்​டு வி​சா​ரணை​யை நீதிப​தி தள்​ளிவைத்​தார்​.