தமிழகத்தில் ஜனவரி மாத பரிசோதனையில் 43 மருந்துகள் தரமற்றவை

தமிழகத்​தில் கடந்த ஜனவரி மாதம் பரிசோதனை செய்​யப்​பட்ட மருந்​துகளில் 43 மருந்துகள் தரமற்​றவை​யாக இருப்​பது தெரிய​வந்​துள்​ளது. நாடு முழு​வதும் விற்​பனை செய்​யப்​படும் மருந்​துகளின் தரத்தை உறுதி செய்​வதற்​காக, மத்​திய, மாநில அரசுகள் ஆய்வு செய்​கின்​றன.

மருந்​தகங்​கள், சில்​லறை விற்​பனையகங்​கள், மொத்த விற்​பனைக் கூடங்​கள், கிடங்​கு​கள், உற்​பத்தி அலகு​களில் இருந்​தும் சில மருந்துகள் எடுத்து பரிசோதனை செய்​யப்​படு​கின்​றன.

அதன்​படி, கடந்த ஜனவரி மாதம் மேற்​கொள்​ளப்​பட்ட ஆய்​வில் நாடு முழு​வதும் 215 மருந்துகள் தரமற்​றவை​யாக இருந்​தது கண்​டறியப்​பட்​டது. அதில் தமிழகத்​திலிருந்து மட்​டும் 43 மருந்துகள் இடம்​பெற்​றிருந்​தன. அதில் சென்னை ஆய்​வகத்​தில் 22 மருந்​துகள், மதுரை ஆய்​வகத்​தில் 21 மருந்​துகள் பரிசோதனை செய்​யப்​பட்​டன.

அதே​போல், கர்​நாடகத்​தில் 21 சதவீத​மும், ராஜஸ்​தானில் 17 சதவீத​மும் தரமற்ற மருந்துகள் இருந்​தன.

தெலங்​கா​னா, கேரளம், ஒடி​சா, ஜம்​மு-​காஷ்மீர், இமாச லப்​பிரதேசம் மாநிலத்​தி​லும் தரக்​குறை​பாடுள்ள மருந்துகள் இருப்​பது தெரிய​வந்​தது.

இது தொடர்​பாக மருந்து கட்​டுப்​பாட்​டுத்துறை அதி​காரி​களிடம் கேட்ட​போது, “ஒரு குறிப்பிட்ட உற்​பத்தி தொகுப்பு (பேட்ச்) மருந்துகள் தரப்​பரிசோதனை

யில் தோல்​வியடைவது, அந்​தத் தொகுப்​புக்கு மட்​டுமே பொருந்​தும். சந்​தை​யில் உள்ள மற்ற மருந்துகள் குறித்து கவலைப்​படத் தேவை​யில்​லை” என்று தெரி​வித்​தனர்​.