‘அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு அரசு பள்ளிகளில் என்ன வேலை? கல்விக் கூடங்கள் உங்கள் புகழைப் பரப்பும் மாநாட்டுத் திடல்கள் அல்ல என்பதை உங்கள் கட்சி நிர்வாகிகளுக்கு உணர்த்துங்கள்’ என முதல்வர் விஜய்யை பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சிறுவர், சிறுமிகளை அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்தும் தவெக அரசின் ‘ரீல்ஸ்’ மோகம் எப்போது குறையப் போகிறது?
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகேயுள்ள அரசு பள்ளியில் பயிலும் சிறார்களிடம் முதல்வர் ஜோசப் விஜய்யின் புகைப்படத்தைக் காட்டி, தவெக நிர்வாகிகள் அரசியல் நோக்கத்துடன் பேசும் காணொலி வெளியாகியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.





