தாம்பரத்தில் புற்றுநோயாளிகளுக்கு மருத்துவ நல்லாதரவு மையம்

தமிழக அரசு சார்​பில் தாம்​பரத்​தில் புற்​று​நோ​யாளி​களுக்கு அரசு நல்​லாதரவு மையம் விரை​வில் பயன்​பாட்​டுக்கு வரு​கிறது. தமிழகத்​தில் ஆண்​டு​தோறும் 1 லட்​சத்​துக்​கும் அதி​க​மானோருக்கு புற்​று​நோய் பாதிப்பு கண்​டறியப்​படு​கிறது.

ஆண்​களை​விட பெண்​களே புற்​று​நோ​யால் அதி​கம் பாதிக்​கப்​பட்டு வரு​கின்​றனர். குறிப்​பாக, மார்​பகப் புற்​று​நோய் பாதிப்பு என்​பது ஒரு லட்​சத்​தில் 16.7 பெண்​களுக்கு ஏற்​படு​வ​தாக புள்​ளி​விவரங்​கள் தெரிவிக்​கின்​றன.

அதே​போல், ஆண்​களில் ஒரு லட்​சத்​தில் 13.6 பேர் வாய்ப்​புற்று நோயால் பாதிக்​கப்​படு​கின்​றனர். தமிழக அரசு பல்​வேறு விழிப்​புணர்​வு, தடுப்பு நடவடிக்​கைகள் மேற்​கொண்​டாலும், புற்​று​நோயை ஆரம்ப நிலை​யிலேயே கண்​டறிவ​தில் சிக்​கல்​கள் நிலவி வரு​கின்​றன.

புற்​று​நோய் பாதிப்பு தீவிரமடைந்த பிறகே பெரும்​பாலானோர் சிகிச்​சைக்கு செல்​கின்​றனர். நோயை குணப்​படுத்த முடி​யாத நிலை​யில், வலி நிவாரண சிகிச்​சைகள் மட்​டும் வழங்​கப்​பட்டு வரு​கின்​றன.

உறவினர்​களால் கைவிடப்​பட்​ட​வர்​களுக்கு ஆதரவு கிடைக்​காத நிலை இருப்​ப​தால், தன்​னார்வ அமைப்​பு​கள், தனி​யார் மருத்​துவ மையங்​கள் சில இடங்​களில் மருத்​துவ நல்​லாதரவு மையங்​களை தொடங்​கி​யுள்​ளன.

குடிநீர், மின்சார வசதி: தமிழக அரசு சார்​பில் அது​போன்ற மையங்​கள் இல்​லாத​தால், ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை – சென்னை மருத்​துவ கல்​லூரி சார்​பில் மையத்தை தொடங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டன. அதற்​கான அனு​மதி அரசிடம் கோரப்​பட்​டது.

அதனை பரிசீலித்த அரசு, தாம்​பரத்​தில் கரோனா காலத்​தில் கட்​டப்​பட்ட தரை மற்​றும் 2 தளங்​கள் கொண்ட கட்​டிடத்தை இதற்கு பயன்​படுத்திக் கொள்ள ஒப்​புதல் அளித்​துள்​ளது. அந்த இடத்​தில் மின் வசதி, குடிநீர் உள்​ளிட்ட கட்​டமைப்​பு​களுக்​காக ரூ.7.44 கோடியை முதலமைச்​சரின் விரி​வான மருத்​துவ காப்​பீட்டு திட்​டத்​தில் மேற்​கொள்ள சென்னை மருத்​துவ கல்​லூரிக்கு அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

தாம்​பரத்​தில் அமைய​வுள்ள உள்ள புற்​று​நோய் மருத்​துவ நல்​லாதரவு மையத்​தில் 180 படுக்கை வசதி​கள் ஏற்​படுத்​தப்​பட​வுள்​ளன. புற்​று​நோ​யாளி​களுக்கு தேவை​யான வலி நிவாரண சிகிச்​சை, மன நல ஆதரவு சிகிச்​சை, உளவியல் ஆலோ​சனை​கள் வழங்க நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதற்​கான மருத்​து​வர்​கள், செவிலியர்​கள் ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில் இருந்து பணி​யமர்த்​தப்​பட​வுள்​ளனர். தூய்​மைப் பணி மற்​றும் பாது​காப்​புப் பணிக்கு 45 பேரை தனி​யார் மூலம்​ ஈடு​படுத்​த அனு​ம​தி வழங்​கப்​பட்​டுள்​ளது.

சமீபத்திய செய்திகள்