திரிசங்கு நிலையில் தவிக்கும் ராமதாஸ்

பாமக இரண்டாக பிளவுப்பட்டு நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஒரு அணியும், தலைவர் அன்புமணி தலைமையில் ஒரு அணியும் செயல்படுகிறது.

அன்புமணி நடத்திய பொதுக்குழுவை அங்கீகரித்து, அவரது தலைவர் பதவியை ஓராண்டுக்கு (ஆகஸ்ட் வரை) நீட்டித்தும், தேர்தல் படிவத்தில் கையொப்பமிடும் அதிகாரத்தை அளித்தும் தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியது.

இதை எதிர்த்தும், பாமக மற்றும் மாம்பழம் சின்னத்தை அன்புமணி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு நாளை (பிப்.2) விசாரணைக்கு வர உள்ளது.

இதற்கிடையில், பாமக தன்னிடம் மட்டுமே இருக்கிறது, கூட்டணிக்கு தன்னுடன்தான் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்ய வேண்டும் என நிறுவனர் ராமதாஸ் அறிவித்திருந்தார். இருப்பினும், ராமதாஸை பொருட்படுத்தாமல், அன்புமணியை அழைத்து பாமகவுடன் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி அறிவித்தார்.