திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றும் இடத்தை ஏன் மாற்றக் கூடாது?

திருப்பரங்குன்றம் மலை​யில் தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது தொடர்​பாக ஏன் பரிசீலிக்​கக் கூடாது என்று நீதிப​தி​கள் கேள்வி எழுப்​பினர். திருப்பரங்குன்றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் தீபம் ஏற்​று​வது தொடர்​பான வழக்​கில் 26 மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்​யப்​பட்​டன.

இவை நீதிப​தி​கள் ஜி.ஜெயச்​சந்​திரன், கே.கே.​ராமகிருஷ்ணன் அமர்​வில் நேற்று விசா​ரணைக்கு வந்​தன. தமிழக அரசின் தலைமை வழக்​கறிஞர் பி.எஸ்​.​ராமன் வாதிடும்​போது, “தீபம் ஏற்​று​வதை தனிப்​பட்​டஉரிமை​யாக கோர முடி​யாது.

மத நல்​லிணக்​கம், பொது அமை​தி​யைக் கருத்​தில் கொள்ள வேண்​டும். 102 ஆண்​டு​களுக்கு முந்​தைய உரிமை​யியல் நீதி​மன்ற உத்​தர​வு, பிரிவி கவுன்​சில் உத்​தர​வு, நீதிபதி கனக​ராஜின் உத்​தரவு ஆகியவை பிள்​ளை​யார் கோயில் மண்​டபத்​தில் தீபமேற்​று​வதை உறுதி செய்​கின்​றன.

தனி நீதிபதி உத்​தர​வில் ராமஜென்ம பூமி வழக்கை மேற்​கோள் காட்​டி​யுள்​ளார். அந்த உத்​தரவு இவ்​வழக்​கில் பின்​பற்​றப்​பட்​டால், மனு​தா​ரர் உரிமை​யியல் நீதி​மன்​றத்​தையே நாட உத்​தர​விட்​டிருக்க வேண்​டும்.

எனவே, தனி நீதிப​தி​யின் உத்​தரவை ரத்து செய்ய வேண்​டும்” என்​றார். அப்​போது நீதிப​தி​கள் “இந்த விவ​காரத்​துக்கு நிரந்​தரத் தீர்​வு​காண வேண்​டும். நீதிபதி கனக​ராஜின் உத்​தர​வின் அடிப்​படை​யில் தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது தொடர்​பாக பரிசீலிக்​கு​மாறு அளிக்​கப்​பட்ட மனுவைப் பரிசீலித்​திருக்​கலாம். அதை ஏன் செய்​வில்​லை?” என்​றனர்.

கோயில் செயல் அலு​வலர் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் மாசிலாமணி “மலை​யில் 8 அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட கிரானைட் தூண்​தான் உள்​ளது. மேலும், அது பிரிட்​டிஷ் காலத்​தில் மலைகளை அளப்​ப​தற்​காக பயன்​படுத்​தப்​பட்ட சர்வே தூண்” என்​றார்.

நீதிப​தி​கள் “அனை​வருக்​கும் தெரி​யும் வகை​யில் அந்த தூணில் முன்பு தீபம் ஏற்​றப்​பட்​டிருக்​கலாமே? அது கோயில் பகு​தி​யில் அமைந்​துள்​ள​தால், அது ஏன் தீபத்​தூணாக இருக்க முடி​யாது” என்​றனர். செயல் அலு​வலர் தரப்​பில் “அந்த தூணில் கார்த்​திகை தீபம் ஏற்​றும் வழக்​கம் இல்​லை” என்று தெரிவிக்​கப்​பட்​டது.

அறநிலை​யத் துறை ஆணை​யர் தரப்​பில் வழக்​கறிஞர் சண்​முகசுந்​தரம் “தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது குறித்து தேவஸ்​தானம் முடிவு செய்ய வேண்​டும்” என்​றார். பின்​னர் நீதிப​தி​கள், “தீபம் ஏற்​றும் இடத்தை மாற்​று​வது தொடர்​பாக தேவஸ்​தானம் பரிசீலிக்​கலாம் என தனி நீதிபதி கூறி​யுள்​ளார். இந்​தக் கோரிக்​கையை ஏன் பரிசீலிக்​கக்​கூ​டாது.

தீபம் ஏற்​று​வ​தில் பிரச்​சினை இல்​லை, எங்கு தீபம் ஏற்ற வேண்​டும் என்​ப​தில்​தான் பிரச்​சினை. பிற மனு​தா​ரர்​கள், எதிர்​மனு​தா​ரர்​களின் வாதங்​களுக்​காக விசா​ரணை டிச. 15-க்கு தள்​ளிவைக்​கப்​படு​கிறது” என்​றனர்.

அப்​போது மேல்​முறை​யீட்டு மனு​தா​ரர்​கள் தரப்​பில், “தனி நீதிப​தி​யின் உத்​தர​வுக்கு இடைக்​கால தடை வி​திக்க வேண்​டும்” என்று கோரினர். அதை ஏற்க மறுத்து” அனைத்து தரப்பு வாதங்​கள் முடியட்​டும், உரிய உத்​தரவு பிறப்​பிக்​கப்​படும்​” என்​று தெரி​வித்​தனர்​.