தீபத்தூண் வழக்கு தீர்ப்பை நிறைவேற்றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரி மனு

திருப்​பரங்​குன்​றம் கார்த்​திகை தீப வழக்​கில் உயர் நீதி​மன்​றம் பிறப்​பித்த உத்​தரவை நிறைவேற்​றாத ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரி​கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

திருப்​பரங்​குன்​றம் மலை உச்​சி​யில் உள்ள தீபத்​தூணில் கார்த்​திகை தீபம் ஏற்ற வேண்​டும் என ராம.ரவிக்​கு​மார், அரச​ பாண்டி ஆகியோர் தொடர்ந்த வழக்​கில் நீதிபதி ஜி.ஆர்​.சு​வாமிநாதன் உத்​தர​விட்​டார். இந்த உத்​தரவு நிறைவேற்​றப்​ப​டாத நிலை​யில், மறு​நாள் மத்​திய தொழில​கப் பாது​காப்பு படை​யினர் பாது​காப்​புடன் மனு​தா​ரர்​கள் தீபம் ஏற்ற உத்​தர​விட்​டார்.

அதன்​படி தீபம் ஏற்​றச் சென்ற மனு​தா​ரர்​கள், திருப்​பரங்​குன்​றத்​தில் 144 தடை​யாணை அமலில் இருப்​ப​தாகக் கூறி திருப்பி அனுப்​பப்​பட்​டனர். பின்​னர் 144 தடை​யாணையை ரத்து செய்து உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. அதன் பிறகும் தீபத்​தூணில் தீபம் ஏற்​றப்​பட​வில்​லை.

இந்​நிலை​யில், திருப்​பரங்​குன்​றம் விவ​காரத்​தில் தொடர் நீதி​மன்ற அவம​திப்பு புரிந்​த​தாகக் கூறி மதுரை ஆட்​சி​யர் பிர​வீன்​கு​மார், மாநகர காவல் ஆணை​யர் லோக​நாதன், திருப்​பரங்​குன்​றம் கோயில் செயல் அலு​வலர் யக்ன நாராயணன், துணை காவல் ஆணை​யர் இனிகோ திவ்​யன், ஏடிஜிபி டேவிட்​சன் தேவாசிர்​வாதம் ஆகியோர் மீது நீதி​மன்ற அவம​திப்பு நடவடிக்கை மேற்​கொள்​ளக் கோரி மனு​தா​ரர்​களில் ஒரு​வ​ரான அரச ​பாண்டி தரப்​பில் புதி​தாக மனு தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது.

அந்த மனு​வில், “நீ​தி​மன்ற உத்​தரவை செயல்​படுத்​தாமல் அவம​திப்பு செய்​ததற்​காக, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் மீது அகில இந்​தி​யப்பணி விதிகள் (நடத்​தை) 1968-ல் அடிப்​படை​யில் துறை ரீதி​யான மற்​றும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மத்​திய உள்​துறைச் செயலருக்கு உத்​தர​விட வேண்​டும்” என்று கூறப்​பட்​டுள்​ளது. இந்த மனு விரை​வில் விசா​ரணைக்கு வர வாய்ப்​புள்​ளது.