தேவநாதன் யாதவ் பிணை மனு தள்ளுபடி

சென்னை தி மயி​லாப்​பூர் இந்து பெர்​மனெண்ட் ஃபண்ட் நிதி நிறு​வனத்​தில் முதலீடு செய்த நூற்​றுக்கு மேற்​பட்ட முதலீட்​டாளர்​களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்​த​தாக தொடரப்​பட்ட வழக்​கில் ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் வைப்​புத்​தொகை​யாக செலுத்த உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

அந்த உத்​தர​வுப்​படி வைப்​புத் தொகையை செலுத்​தாத நிதி நிறு​வனத்​தின் இயக்​குநர் தேவ​நாதன் யாதவ் ஜாமீன் மனுவை கடந்த பிப்​ர​வரி 5-ம் தேதி உயர் நீதி​மன்​றம் தள்​ளு​படி செய்​தது.

இதையடுத்​து, ஜாமீன் கோரி தேவ​நாதன் யாதவ் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மனு தாக்​கல் செய்யப்​பட்​டது. இந்த மனுவை உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் தீபாங்​கர் தத்​தா, சதீஷ் சந்​திர சர்மா அமர்வு விசா​ரித்​தது.

தேவ​நாதன் யாதவ் தரப்​பில் ஆஜரான மூத்த வழக்​கறிஞர் முகுல் ரோஹத்கி​யின் வாதத்தை நிராகரித்த நீதிப​தி​கள், இந்த விவ​காரத்​தில் பிணை வழங்க மறுத்த சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வில் தலை​யிட முடி​யாது என்று குறிப்​பிட்டு ஜாமீன் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டனர்.

மேலும், ரூ.100 கோடியை விசா​ரணை நீதி​மன்​றத்​தில் வைப்​புத்​தொகை​யாக செலுத்​தும் பட்​சத்​தில் மீண்​டும் ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​ய​வும் மனு​தா​ரருக்கு நீதிப​தி​கள் அனு​மதி அளித்​தனர்.