தமிழகத்தில் 2026-ம் ஆண்டுக்கான சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை கண்காணிக்க தேர்தல் ஆணையம் 12 சிறப்பு வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களை நியமித்துள்ளது.
இவர்களுடனான ஆலோசனைக் கூட்டம், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்றது.
இக்கூட்டத்தின்போது. திருத்தக் காலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் பார்வையாளர்களின் பங்கு, பொறுப்புகள் மற்றும் கடமைகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி விரிவாக விளக்கினார்.
திருத்தப் பணிகள் துல்லியமாகவும் சீராகவும் நடைபெறும் வகையில் அவற்றை தொடர்ச்சியாக கண்காணித்து, மாவட்ட அதிகாரிகளுக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
எஸ்ஐஆர் பணி காலத்தில், இப்பணியின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்யவும். சிக்கல்களுக்கு தீர்வு காணவும். தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதை உறுதி செய்யவும்.
தங்கள் பொறுப்பில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்துக்கும் குறைந்தது 3 முறை பார்வையிட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.





