பத்திரிகையாளர்​ ஓய்வூதியம் உயர்வு

பத்திரிகையாளர் சங்​கத்​தின் பிரநி​தி​கள் முதல்​வர் மு.க.ஸ்​டா​லினை சென்னை தலை​மைச் செயலகத்​தில் நேற்று சந்​தித்​தனர். அப்​போது அவர்கள் பெற்​று​வரும் ஓய்​வூ​தி​யத்​தில் உயர்​வு, மருத்​து​வக் காப்​பீடு, வீட்​டு​வசதி உள்​ளிட்ட கோரிக்​கைகளை முதல்​வரிடம் முன்​வைத்​தனர்.

பத்திரிகையாளர்கள் சங்​கத்​தினரின் கோரிக்​கையை ஏற்​கும் வகை​யில் பத்திரிகையாளர்கள் தற்​போது பெற்​று ​வரும் ஓய்​வூ​தி​யம் மாதம் ரூ.12 ஆயிரத்​தில் இருந்து ரூ.15 ஆயிர​மாக​வும் குடும்ப ஓய்​வூ​தி​யம் ரூ.6ஆ​யிரத்​தில் இருந்து ரூ.7,500ஆக​வும் உயர்த்தி முதல்​வர் ஸ்டா​லின் உத்​தர​விட்​டுள்​ளார்.

மேலும், சென்னை பத்திரிகையாளர்கள் குடி​யிருக்க வீடு அல்​லது வீடு​கட்ட நிலம் ஒதுக்​கித் தரவேண்​டும் என்ற கோரிக்கை தொடர்​பாக, தமிழ்​நாடு வீட்​டு​வசதி வாரி​யத்​தால் செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் வீட்​டு மனை​கள் வழங்க ஏற்​பாடு செய்​ய​வும், இதற்கு பத்​திரி​கை​யாளர்​கள் கூட்​டுறவு வீட்​டு​ வசதி சங்​கம் தொடங்கி நடவடிக்கை மேற்​கொள்​ள​வும் முதல்​வர் அறிவுறுத்​தி​யுள்​ளார் என அரசு செய்​திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.