மடப்புரம் அஜித்குமார் கொலை வழக்கில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உட்பட 4 பேர் சேர்ப்பு

மடப்​புரம் அஜித்குமார் கொலை வழக்​கில் மானாமதுரை டிஎஸ்​பி, திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் உட்பட 4 பேர் குற்​ற​வாளி​களாக சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

கோயில் காவலாளி அஜித்குமார் நகை திருட்டு வழக்​கில் தனிப்​படை போலீ​ஸா​ரால் விசா​ரிக்​கப்​பட்​ட​போது, போலீ​ஸார் தாக்​கிய​தில் உயி​ரிழந்​தார். இது தொடர்​பாக தனிப்​படை காவலர்​கள் கண்​ணன், ஆனந்த், பிரபு, ராஜா, சங்கர மணி​கண்​டன் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்த வழக்கை சிபிஐ விசா​ரித்​து, மதுரை 5-வது கூடு​தல் அமர்வு நீதி​மன்​றத்​தில் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​தது. பின்​னர், தனிப்​படை காவல் வேன் ஓட்​டுநர் ராமச்​சந்​திரன் கைது செய்​யப்​பட்​டார்.

இந்​நிலை​யில், வழக்கு தொடர்​பான கூடு​தல் குற்​றப் பத்​திரிகையை நீதிபதி ஜோசப் ஜாய் முன்​னிலை​யில் சிபிஐ நேற்று தாக்​கல் செய்​தது.

அதில், சம்​பவத்​தன்று பணி​யில் இருந்த மானாமதுரை சரக டிஎஸ்பி சண்​முகசுந்​தரம் மற்​றும் திருப்​புவனம் காவல் ஆய்​வாளர் ரமேஷ்கு​மார், சிறப்பு சார்பு ஆய்​வாளர் சிவக்​கு​மார், தலை​மைக் காவலர் இளை​ய​ராஜா உள்​ளிட்ட 4 பேரின் பெயர்​களும் குற்​ற​வாளி​கள் பட்​டியலில் சேர்க்​கப்​பட்​டுள்​ளது.

அஜித்குமார் கொலை வழக்​கில் இது​வரை தனிப்​படைக் காவலர்​கள் 6 பேர் கைதாகி சிறையில் உள்ள நிலை​யில், அவர்​களுக்கு இது​வரை ஜாமீன் கிடைக்​க​வில்​லை.

கூடு​தல் குற்​றப் பத்​திரி​கை​யில் டிஎஸ்பி உட்பட 4 பேர் சேர்க்​கப்​பட்​டிருப்​ப​தால், அவர்​களும் கைது செய்​யப்​படும் வாய்ப்​புள்​ளது.

இதுகுறித்து சித்​ர​வதை களுக்கு எதி​ரான கூட்​டமைப்​பின் சார்​பில் வழக்​கறிஞர் ஹென்றி திபேன் கூறும்​போது, “இந்த வழக்​கில் டிஎஸ்​பிக்கு கட்​டளை​யிட்​டது யார்? டிஎஸ்​பியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்​டது யார்? என்​பது குறித்​தான வி​சா​ரணையை சிபிஐ நடத்​தி, முழு உண்​மை​யை வெளிப்​படுத்​த வேண்டும்” என்றார்.