மயிலாப்பூரில் களப்பணியைத் தொடங்கிய தமிழிசை

​பாஜக வேட்​பாளர் பட்​டியல் வெளி​யா​வதற்கு முன்​பாகவே, மயி​லாப்​பூரில் களப்​பணியை தீவிரப்​படுத்​தி​யுள்​ளார் தமிழிசை சவுந்​தர​ராஜன். கபாலீஸ்​வரர் பங்​குனித் தேரோட்ட விழா​வில் நேற்று அவர் உற்​சாகத்​துடன் கலந்​து​கொண்​டார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தல் களம் சூடு​பிடித்​துள்​ளது. தொகு​திப் பங்​கீடு, வேட்​பாளர் தேர்​வில் அரசி​யல் கட்​சிகள் மும்​முரம் காட்டி வரு​கின்​றன. தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் பாஜக 28 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

சென்​னை​யின் முக்​கிய அடை​யாள​மான மயி​லாப்​பூர் தொகுதி அக்​கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது. மயி​லாப்​பூர் தொகுதி பாஜக​வுக்கு என உறு​தி​யான அன்​றே, அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி​யுடன் பிரச்​சார வாக​னத்​தில் தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் தமிழிசை சவுந்​தர​ராஜனும் வலம் வந்​தார்.

பாஜக வேட்​பாளர் பட்​டியல் அறிவிக்​கப்​படும் முன்பே பிரச்​சா​ரத்​துக்கு வந்​தது குறித்து கேட்​டதற்​கு, தொகுதி பொறுப்​பாளர் என்ற முறை​யில் பங்​கேற்​ற​தாக தெரி​வித்​தார். ஆனாலும், தொடர்ந்து மயி​லாப்​பூரில் பல்​வேறு நிகழ்​வு​களி​லும் அவர் பங்​கேற்று வரு​கிறார்.