மறுமலர்ச்சி திமுக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி, மாநில சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் ஜெ.சிக்கந்தர் அவர்கள் தலைமையில் நாளை 01.02.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 5.30 மணிக்கு சென்னை எழும்பூர், சிராஜ் மஹாலில் நடைபெறுகிறது.

கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரை ஆற்றுகிறார்.

கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்.பி., இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, கே.நவாஸ்கனி எம்.பி., ஆடிட்டர் அர்ஜூனராஜ், மு.செந்திலதிபன், செஞ்சி ஏ.கே.மணி, ஆடுதுறை முருகன், தி.மு.இராசேந்திர்ன் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள்.

கழகத் துணைப் பொதுச்செயலாளர் டாக்டர் ரொஹையா, வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், நெல் லை மத்திய மாவட்டச் செயலாளர் கே.எம்.ஏ.நிஜாம், கழக சிறுபான்மைப் பிரிவுச் செயலாளர் செ.திவான் மற்றும் நெல்லை அபுபக்கர் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

செங்கல்பட்டு வடக்கு மாவட்டத் துணைச் செயலாளர் குரோம்பேட்டை அ.நாசர் வரவேற்புரை ஆற்றுகிறார்.

எழும்பூர் பகுதிச் செயலாளர் தென்றல் நிசார் தொகுத்து வழங்குகிறார்.

தங்கள் பத்திரிகை / ஊடகத்தின் சார்பில் செய்தியாளரையும், புகைப்பட, வீடியோ நிபுணரையும் நாளை 28.02.2026 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு, சென்னை எழும்பூர், சிராஜ் மஹாலுக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.