மெரினாவில் கடை அமைக்க நீதிபதி மேற்பார்வையில் 300 பயனாளிகள் குலுக்கல் முறையில் தேர்வு

மெரினா கடற்​கரை​யில் சென்னை உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, அமைக்​கப்பட உள்ள 300 கடைகளுக்​கான வியா​பாரி​களை குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யும் நிகழ்​வு, சென்னை மாநக​ராட்​சி​யின் ரிப்​பன் மாளிகை வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இது தொடர்​பான அறி​விப்​பு, சென்னை உயர் நீதி​மன்​றம் குறிப்​பிட்​டுள்ள 1,417 வியா​பாரி​களுக்கு தெரிவிக்​கப்​பட்​டது. அஞ்​சல் மூலம் அனுப்​பப்​பட்ட அறி​விப்​பு​களை 21 வியா​பாரி​கள் பெற மறுத்​தனர்.

உயர் நீதி​மன்ற உத்​தர​வில் குறிப்​பிட்​டுள்​ள​வாறு மெரினா கடற்​கரை​யின் 4 நீலக்​கொடிதிட்​டப் பகு​தி​களில் மொத்​தம் 300 கடைகள் அமைக்​கப்பட உள்ளன உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படி, மாநக​ராட்சி ஆணை​யர் ஜெ.குமரகுருபரன் தலை​மையி​லான அலு​வலர்​கள் அடங்​கிய இடைக்​கால குழு​வின் ஒத்​துழைப்​புடன் ஜம்​மு-​காஷ்மீர் உயர் நீதி​மன்ற முன்​னாள் தலைமை நீதிபதி என்​.​பால் வசந்​தகு​மார், முன்​னாள் மாவட்ட முதன்மை நீதிபதி பி.மோகன்​ராஜ், சென்னை உயர் நீதி​மன்ற முன்​னாள் துணை பதி​வாளர் ஆர்​.ரங்​க​நாதன் ஆகியோர் மேற்​பார்​வை​யில் குலுக்​கல் நடை​பெற்​றது.

ஏற்​கெனவே மெரினா கடற்​கரை​யில் உணவு வகைப்​பாட்​டில் 848 கடைகள், அலங்​கார வகைப்​பாட்​டில் 261, பொம்​மை​கள் வகைப்​பாட்​டில் 308 என மொத்​தம் 1,417 கடைகளை நீதி​மன்​றம் அடை​யாளம் கண்​டுள்​ளது. இதில், ஒவ்​வொரு வகை​யிலும் தலா 100 வியா​பாரி​கள் என 300 பேர் குலுக்​கல் முறை​யில் தேர்வு செய்​யப்​பட்​டனர்.

அதில் தலா 5 கடைகள் என 15 கடைகள் மாற்​றுத் திற​னாளி​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​டது. தேர்வு செய்​யப்​பட்ட வியா​பாரி​கள் பட்​டியல் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

இந்த குலுக்​கல் நிகழ்​வு, 4 எல்​இடி திரைகளில் காட்​சிப்​படுத்​தப்​பட்​டது. இதற்​கிடையே, இந்த குலுக்​கல் நிகழ்வை மெரினா கடற்​கரை வியா​பாரி​கள் புறக்​கணித்​தனர். மேலும் தங்​கள் எதிர்ப்பை தெரிவிக்​கும் வகை​யில், கடற்​கரை​யில் நேற்று கடைகள் அனைத்​தும் அடைக்​கப்​பட்​டிருந்​தன.

இது தொடர்​பாக விவே​கானந்​தர் கடற்​கரை மணற்​பரப்பு வியா​பாரி​கள் சங்​கத் தலை​வர் சசிகு​மார் கூறும்​போது, “மெரினா கடற்​கரை​யில் 1996 கடைகள் உள்​ளன. இந்த கடைகளை நம்பி 5 ஆயிரம் பேர் உள்​ளனர். இவர்​கள் அனை​வரும் மீனவர்​கள்.

எங்​கள் கருத்தை கேட்​காமல், இங்கு 300 பேருக்கு மட்​டுமே கடைகள் ஒதுக்​கப்​படும் என நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது. இந்த தீர்ப்​புக்கு எதிர்ப்பு தெரி​வித்​து, குலுக்​கல் முறை​யில் பயனாளி​கள் தேர்ந்​தெடுக்​கும் நிகழ்வை புறக்​கணித்​துள்​ளோம். நீதி​மன்ற தீர்ப்பை எதிர்த்​தும், கடைகளை முறைப்​படுத்​தி, அனைத்து கடைகளுக்​கும் ஒதுக்​கீடு வழங்​கக் கோரி உச்ச நீதி​மன்​றத்​தில்​ மேல்​முறை​யீடு செய்​திருக்​கிறோம்​” என்​றார்​.

சமீபத்திய செய்திகள்