அதிபர் டிரம்பிற்கு எதிராக போர்க்கொடி தூக்கும் ஆளுநர்கள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா, சீனா உள்பட 75-க்கும் மேற்பட்ட நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதித்தார். அமெரிக்கா மீது பல நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக குற்றம்சாட்டி இந்த வரி நடவடிக்கையை மேற்கொண்டார்.சர்வதேச அவசர பொருளாதார அதிகார சட்டம் 1977-ன் கீழ் இந்தப் பரஸ்பர வரி விதிப்பை டிரம்ப் அமல்படுத்தினார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது அதிகாரத்தை மீறி செயல்படுகிறார் எனக்கூறி அவர் விதித்த வரிகளை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.இதற்கிடையே, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை எட்டிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஒப்புக்கொள்ளப்பட்ட வரிகளுக்குப் பதிலாக தற்போது புதிய 10 சதவீத வரிகளை எதிர்கொள்வார்கள் என தெரிவித்தார்.அதிபர் டிரம்ப் ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பில், இந்த வரி விகிதத்தை 15 சதவீதமாக உயர்த்த உள்ளதாக அதிரடியாக அறிவித்தார்.

இந்தப் புதிய 15 சதவீத வரி விதிப்பானது பிப்ரவரி 24-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக நாடுகள் மீதான ட்ரம்ப்பின் அதீத வரிவிதிப்பை, அமெரிக்க உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ள நிலையில், அதன் அடிப்படையில் வசூலிக்கப்பட்ட பல பில்லியன் கோடி டாலர் பணத்தை திரும்ப வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

அதிக வரி விதிப்பால், மக்களுக்கு ஏற்பட்ட விலை உயர்வு சட்டவிரோதமானது என இலினாய்ஸ் ஆளுநர் JB Britzker, கலிபோர்னியா ஆளுநர் Gavin Newsom நியூயார்க் ஆளுநர் Kathey Hochul ஆகியோர் காட்டமாக உள்ளனர்.