“அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார்” – சீனா அறிவிப்பு

அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா அறி​வித்​துள்​ளது.

மத்​திய கிழக்​குப் பகு​தி​யில் கடந்த 10 ஆண்​டு​களாக இல்​லாத வகை​யில் போர் பதற்​றம் அதி​கரித்​துள்​ளது. இந்​நிலை​யில், ஈரானைக் கட்​டுப்​படுத்த அந்​நாட்​டின் ஏவு​கணை உற்​பத்தி மையங்​கள், அணு சக்தி மையங்​களை குறி வைத்து இஸ்​ரேல் தொடர்ந்து தாக்​குதல் நடத்தி வரு​கிறது.

இந்த தாக்​குதலில் ஈரானில் உயி​ரிழந்​தோர் எண்​ணிக்கை 1,000-த்​தைத் தாண்டி உள்​ளது. இதனிடையே, அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே ஏற்​பட்​டுள்ள போரை நிறுத்​து​வதற்கு மத்​தி​யஸ்​தம் செய்​யத் தயார் என்று சீனா நேற்று அறி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக சீன வெளி​யுறவுத்​துறை செய்​தித் தொடர்​பாளர் லின் ஜியான் கூறிய​தாவது: அமெரிக்​கா, இஸ்​ரேல் – ஈரான் இடையே ஏற்​பட்​டுள்ள போரை பேச்​சு​வார்த்தை மூலம் நிறுத்​தலாம். போரை நிறுத்​து​வது தொடர்​பாக இரு நாடு​களும் நிதானத்​தைக் கடைப்​பிடிக்​கலாம். இதற்​காக இரு நாடு​களிடையே மத்​தி​யஸ்​தம் செய்ய சீனா தயா​ராக உள்​ளது.

போரை நிறுத்​து​வது தொடர்​பாக ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துணைப் பிரதமர் அப்​துல்லா பின் சயீத் அல் நஹ்​யான் உட்பட வளை​குடா பிராந்​தி​யம் முழு​வ​தி​லும் உள்ள அரசி​யல் தலை​வர்​களு​டன் சீன அமைச்​சர் வாங் யி தொலைபேசி​யில் உரை​யாடி​யுள்​ளார்.

தேசிய பாது​காப்பை உறுதி செய்​வ​தில் ஐக்​கிய அரபு அமீரகத்​தை, சீனா ஆதரிக்​கும். பேச்​சு​வார்த்தை மூலம் போரை நிறுத்த முயற்​சிப்​ப​தில் மற்ற வளை​குடா நாடு​களை​யும் சீனா ஆதரிக்​கும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.