அமைதி பேச்சுவார்த்தைக்காக புடின் பரிந்துரைத்த ஜேர்மன் தலைவர்

ரஷ்யா உக்ரைன் நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தம் செய்ய முன்னாள் ஜேர்மன் சேன்ஸலர் ஒருவரின் பெயரை ரஷ்ய ஜனாதிபதி புடின் பரிந்துரைத்துள்ள நிலையில், ஐரோப்பிய அரசாங்கங்கள் அவரது பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டன.

புடின் பரிந்துரைத்த ஜேர்மன் தலைவர்

ரஷ்ய ஜனாதிபதியான புடின், நான்காண்டு ரஷ்ய உக்ரைன் போர் முடிவை நோக்கிச் செல்வதாக தான் கருதுவதாக தெரிவித்துள்ள நிலையில், போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பில் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு சரியான நபர் என தான் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröderஐத்தான் கருதுவதாக புடின் தெரிவித்துள்ளார். மொத்த ஐரோப்பிய தலைவர்களிலும், நான் முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröderஉடன் பேசுவதைத்தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் புடின்.

ஆனால், ஐரோப்பிய அரசாங்கங்கள் புடினுடைய பரிந்துரையை ஏற்க மறுத்துள்ளன. பிரஸ்ஸல்ஸில் கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள், ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வரத் தயாராக உள்ளதையும், புடின் உண்மையாகவே ஐரோப்பிய அமைதி மற்றும் பாதுகாப்புக்காக பேச்சுவார்த்தை நடத்துவதையும் நம்புவதாக இல்லை.

அத்துடன், புடினுடன் நெருக்கமான நட்பு வைத்துள்ளவரும், ரஷ்ய நிறுவனங்களுக்காக வேலை செய்தவருமான முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröder, அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டனர் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள்.

அமைதி பேச்சுவார்த்தைக்காக புடின் பரிந்துரைத்த ஜேர்மன் தலைவர்: ஏற்க மறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் | Eu Ministers Reject Putin Idea For Schroeder

புடின், அமைதி பேச்சுவார்த்தை நடத்தும் இருதரப்பிலும், தானே இருக்கவேண்டும் என்பற்காகவே முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröderஐ அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்கவைக்க விரும்புகிறார் என்றும் அவர்கள் கூறியுள்ளார்கள்.

அத்துடன், ஐரோப்பாவுக்கான ஜேர்மன் அமைச்சரான Gunther Krichbaum, முன்னாள் ஜேர்மன் சேன்ஸலரான Gerhard Schröder புடினிடம் பெரும் செல்வாக்குடையவர் என்றும், அவருக்கு நேர்மையான பேச்சுவார்த்தை நடத்தும் குணாதிசயங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.