இந்தியாவில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ; 09 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் டெல்லியில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

டெல்லியின் பாலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் புதன்கிழமை (18) காலை 07 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 30 தீயணைப்புப் படைகள் தீயை அணைத்துள்ளனர். இந்த விபத்தில் 03 குழந்தைகள் உட்பட 09 பேர் உயிரிழந்துள்ளன. மேலும் காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்துக்கு இரங்கல் தெரிவித்து டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா வெளியிட்டுள்ள பதிவில்,

“பாலம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்து துரதிர்ஷ்டவசமானது. மாவட்ட நிர்வாகம், டெல்லி தீயணைப்புத் துறை மற்றும் டெல்லி பொலிஸ் ஆகியவை மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தி வருகின்றன. இவ்விபத்து தொடர்பில் விசாரணை செய்ய நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்