இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்

இஸ்ரேல் பிரதமர் அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குறிப்பிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த தாக்குதலில் பிரதமர் நெதன்யாகுவின் நிலை குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் ஈரானிய உயர் தலைவர் அலி காமேனி உயிரிழந்தார். அது மட்டுமன்றி, ஈரானில் பொதுமக்களில் பலர் உயிரிழந்துள்ளனர்.

ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களுக்கு பதில் தாக்குதலாக, அமெரிக்காவின் இராணுவ தளங்கள் அமைந்துள்ள பல இடங்களிலும் மத்திய கிழக்கில் அமெரிக்க நட்பு நாடுகளிலும் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்நிலையில் இஸ்ரேலிலும் பல இடங்களில் ஈரான் தாக்குதல் மேற்கொண்டு வருகிறது.

இவ்வாறான சூழலில் இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப்படை அலுவலகத்தின் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானின்  பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இன்று மூன்றாவது நாளாக ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தொடர் தாக்குதல் நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.