அமெரிக்கா, பஹ்ரைன், ஜோர்டான், குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இணைந்து ஈரானின் “பொறுப்பற்ற” தாக்குதல்களைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.
ஈராக், ஜோர்டான், குவைத், ஓமான், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் இறையாண்மைக்கு எதிராக ஈரான் நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை இந்த நாடுகள் வன்மையாகக் கண்டித்துள்ளன.
ஈரானின் இந்தத் தாக்குதல்கள் எந்தவொரு நியாயமும் அற்றவை எனவும், இவை பொதுமக்கள் வாழும் பகுதிகள் மற்றும் பொதுக் உள்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்தப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈரானின் இத்தகைய நடவடிக்கைகள் பிராந்திய அமைதியை சீர்க்குலைப்பதோடு, பல நாடுகளின் இறையாண்மையை மீறும் ஆபத்தான செயல் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தங்கள் குடிமக்கள் மற்றும் நிலப்பகுதியைப் பாதுகாக்க தங்களுக்கு முழு உரிமை உண்டு எனவும், ஈரானின் தாக்குதல்களைத் தடுக்க வான் பாதுகாப்பு ஒத்துழைப்பு சிறப்பாகச் செயல்பட்டதாகவும் நாடுகள் தெரிவித்துள்ளன.
![]()




