ஈரானுக்கு எதிரான தாக்குதல்களை நிறுத்தி வைக்கும் அமெரிக்காவின் முடிவுக்கு இஸ்ரேல் அரசு ஆதரவு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், \”ஈரான் உடனடியாக ஹார்முஸ் நீரிணையை திறந்து, அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் பிராந்திய நாடுகள் மீதான அனைத்துத் தாக்குதல்களையும் நிறுத்தும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஈரான் மீதான தாக்குதல்களை இரண்டு வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் ஜனாதிபதி டிரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது.
மேலும், ஈரான் இனி அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் அண்டை அரபு நாடுகள் மற்றும் உலகிற்கு அணு, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சியையும் இஸ்ரேல் ஆதரிக்கிறது. . இருப்பினும், ஈரானின் ஆதரவைப் பெற்றுள்ள ஹிஸ்புல்லாவின் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில், தெற்கு லெபனானில் இஸ்ரேல் தாக்குதலை தொடரும். வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில், அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இஸ்ரேலின் பிராந்திய நட்பு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் இந்த இலக்குகளை அடைவதில் உறுதியாக இருப்பதாக அமெரிக்கா இஸ்ரேலிடம் தெரிவித்துள்ளது.
இந்த இரண்டு வார கால போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கவில்லை” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்வதற்கான காரணம் என்னவென்றால், ஈரானில் நாம் ஏற்கனவே அனைத்து ராணுவ இலக்குகளையும் அடைந்துவிட்டோம். மேலும், ஈரானுடனான நீண்டகால அமைதி மற்றும் மத்திய கிழக்கில் அமைதி தொடர்பான ஒரு திட்டவட்டமான உடன்படிக்கையை எட்டுவதில் வெகுதூரம் முன்னேறிவிட்டோம். ஈரானிடமிருந்து 10 அம்ச முன்மொழிவைப் பெற்றோம்.
அது பேச்சுவார்த்தைக்கு உகந்த அடித்தளமாக அமையும் என்று நாங்கள் நம்புகிறோம். அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையே கடந்த கால கருத்து வேறுபாடுகளின் பல்வேறு அம்சங்களும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன. ஆனால் இந்த ஒப்பந்தத்தை இறுதிசெய்து நிறைவு செய்வதற்கு இரண்டு வார கால அவகாசம் தேவைப்படும்” என்று பதிவிட்டிருந்தார்.





