ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல் நடத்தும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் ஏவுகணைத் திட்டத்தையும் அணுசக்தித் திட்டத்தையும் தொடர்ந்து முறியடிப்போம் என அவர் கூறியுள்ளார்.
அத்துடன் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பின் மீதும் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்துவோம் என நெதன்யாகு மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராணுவத்தின் ஆதரவால் ஈரானுடனான போரில் முக்கிய இலக்குகளை அடைய வாய்ப்புள்ளது.
ஈரானின் அணு உலைகள் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீது நடத்தப்படும் அனைத்து இராணுவ தாக்குதல்களும் 5 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று திங்கட்கிழமை (23) அறிவித்திருந்தார்.
அதனையடுத்து, போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் எந்த பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை என ஈரான் மறுத்து, ஈரானின் மிரட்டலுக்கு ட்ரம்ப் அடிபணிந்துவிட்டதாகவும் கூறியிருந்தது.
இந்நிலையிலேயே நெதன்யாகு ஈரானுடனான போர் தொடரும் என அறிவிப்பு விடுத்துள்ளார்.




