தன்னைத் படுகொலை செய்ய ஈரான் தலைவர்கள் முயற்சித்தால் அல்லது அவ்வாறான தாக்குதலை நடத்தினால், ஈரானின் அனைத்துப் பகுதிகளும் அமெரிக்க இராணுவத்தால் முற்றிலுமாக நிர்மூலமாக்கப்பட்டு அழிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெள்ளிக்கிழமை (10) இரவு தனது ‘டுரூத் சோஷியல்’ (Truth Social) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த செய்தியிலேயே அதிபர் ட்ரம்ப் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பல நாட்கள் நீடித்த இறுதிச் சடங்குகளின் போது, ஜனாதிபதி ட்ரம்பைக் கொலை செய்யுமாறு பகிரங்கமாக அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்தே ட்ரம்பின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.




