கடந்த மார்ச் 1-ம் தேதி அமெரிக்க விமானப்படையின் 3 எப்-15 இ ரக போர் விமானங்களை குவைத்வான் பாதுகாப்பு ஆயுதங்கள் தவறுதலாக சுட்டு வீழ்த்தின.
சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க விமானப்படையின் அதி நவீன எப்-35 போர் விமானத்தை தாக்கியதாக ஈரான் கூறியது. இந்த விமானம் அமெரிக்க விமானப்படை தளத்தில் அவசரமாக தரையிறங்கியதாக கூறப்பட்டது. இந்நிலையில் ஹார்முஸ் தீவு அருகே எதிரி நாட்டின் எப்-15 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஊடகம் ஒரு வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளது.
ஈரானின் வான் பாதுகாப்பு கருவிகள் மூலமாக இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ஈரான் ஊடகம் தெரிவித்து, அதற்கு ஆதாரமாக வீடியோ ஒன்றையும் பதிவேற்றம் செய்துள்ளது. ஆனால் இதை எந்த நாடும் உறுதி செய்யவில்லை. எப்-15 ரக போர் விமானத்தை அமெரிக்கா தவிர சவுதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளும் வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.





