அமெரிக்காவில் தற்போது உயர்ந்து வரும் எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் தற்காலிகமானவை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கு நாடுகளுக்கு இடையிலான போர் பதற்றங்கள் காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு விலைகள் உயர்ந்துள்ளன.
அத்துடன் சில நாடுகளில் எரிபொருள் மற்றும் எரிவாயு நெருக்கடியும் நிலவி வருகிறது. இந்த நிலையிலேயே குறித்த விடயத்தை டிரம்ப் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானுக்கு எதிரான போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு நீண்ட காலத்திற்கு நீடிக்காது. இந்தப் போர் மிக விரைவில் முடிவுக்கு வரும்.போர் முடிந்தவுடன், உங்கள் எரிபொருள் விலைகள் ஒரு பாறையைப் போல வேகமாகக் கீழே இறங்கும். அதை நீங்கள் காண்பீர்கள் என அவர் உறுதியளித்துள்ளார்.





