ஏலியன்கள் பற்றிய ரகசிய ஆவணங்களை வெளியிடுமாறு ட்ரம்ப் அதிரடி உத்தரவு

ஏலியன்கள் என்கிற வேற்றுக்கிரகவாசிகள் தொடர்பான தகவல்கள், பறக்கும் தட்டுக்கள் முதலான அடையாளம் காணப்படாத பறக்கும் வான்வெளிப் பொருட்கள் (unidentified flying objects – UFOs), அடையாளம் காணப்படாத வான்வெளி நிகழ்வுகள் (Unidentified aerial phenomena – UAP)  பற்றிய ரகசிய ஆவணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடுமாறு உரிய துறையினருக்கு உத்தரவிட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (19) இந்த உத்தரவைப் பிறப்பித்த ட்ரம்ப், வேற்றுக்கிரகவாசிகளின் வாழ்க்கை, அடையாளம் காணப்படாத வான்வழி நிகழ்வுகள், பொருட்களைப பற்றிய சிக்கலான, ஆனால் மிகவும் சுவாரஸ்யமான தகவல்களை பொதுமக்கள் அறிய வெளியிடுமாறு உரிய அதிகாரிகளைப் பணித்துள்ளார்.

ட்ரம்ப் இவ்வாறு உத்தரவிட்ட பின்னர், வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட், ட்ரம்பின் அறிவிப்பை, “இந்த உலகத்துக்கு அப்பாற்பட்ட செய்திகள்” என எக்ஸ் தளத்தில் விபரித்துள்ளார்.

நீண்ட காலமாகவே அமெரிக்க பாதுகாப்புத்துறையும் நாசாவும் சேகரித்ததாக கூறப்படும் அடையாளம் தெரியாத வான்வெளிப் பொருட்கள் மற்றும் ஏலியன்கள் பற்றிய தகவல்களை ரகசியமாக வைத்திருப்பதாக சர்வதேச அளவில் பல்வேறு கருத்துக்கள் கிளம்பியிருந்தன.

இந்நிலையில், சமீபத்தில் இது தொடர்பாக பேசிய ட்ரம்ப், “ஏலியன்கள் இருப்பது உண்மைதான்” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கூறியிருந்ததை சுட்டிக்காட்டி, “ஒபாமா பெரிய தவறிழைத்துவிட்டார்” என்றும் விமர்சித்திருந்தார்.

அதனைத் தொடர்ந்தே, தற்போது, ட்ரம்ப், மனித அனுபவங்களுக்கு அப்பாற்பட்ட வான்வெளி பொருட்கள், ஏலியன்கள் பற்றி இதுவரை சேகரித்து வைக்கப்பட்டுள்ள தகவல்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துமாறு உத்த