கனடாவில் மிகவும் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளில் ஒருவரான நிக்கோலஸ் சிங் (Nicholas Singh), டொராண்டோ காவல்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொள்ளை மற்றும் துப்பாக்கி சம்பந்தப்பட்ட குற்றங்களுக்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து வந்த இவர், கடந்த ஆண்டு சட்டவிரோதமாகத் தப்பியோடித் தலைமறைவாக இருந்து வந்தார்.
இவர், கனடாவின் மிகவும் தேடப்படும் நபர்கள் பட்டியலில், கடந்த ஒக்டோபரில் வெளியிடப்பட்ட BOLO (Be on the lookout) திட்டத்தின் முதல் 25 பட்டியலில் 15வது இடத்திலிருந்தார்.
கதற்கமைய டொராண்டோவில் வைத்து காவல்துறை இவரைக் கைது செய்துள்ளது.
அத்துடன் குறித்த நபரிடமிருந்து துப்பாக்கியொன்றும், தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் இவர் மீது, தடை செய்யப்பட்ட அல்லது உரிமம் பெறாத துப்பாக்கியை வைத்திருத்தல், மற்றும் துப்பாக்கியுடன் மோட்டார் வாகனத்தில் பயணித்தல் உட்பட ஆறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





