கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டிக்கொண்டிருக்கும் நிலையில், கிரீன்லாந்துக்கு ஆதரவாக சில நாடுகள் குரல் கொடுத்துவருகின்றன.
பிரான்ஸ் எடுக்கும் நடவடிக்கை
பிரான்சைப் பொருத்தவரை கிரீன்லாந்தை கைப்பற்றப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மிரட்டுவதற்கு பிரான்ஸ் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துவருகிறது.

மேலும், கிரீன்லாந்துக்கு தனது ஆதரவைத் தெரிவிக்கும் வகையில், நடவடிக்கை ஒன்றையும் எடுக்க முடிவு செய்துள்ளது பிரான்ஸ்.ஆம், பிரான்சும், கனடாவும், கிரீன்லாந்தில் தத்தம் தூதரங்களைத் திறக்க முடிவு செய்துள்ளன.
கிரீன்லாந்தின் தலைநகரான Nuukஇல் பிரெஞ்சு தூதரகத்தை திறக்க இருப்பதாக தெரிவித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கிரீன்லாந்துக்கு ஐரோப்பாவின் ஆதரவைத் தெரிவித்துக்கொண்டுள்ளதுடன், ட்ரம்பின் மிரட்டல்களை விமர்சித்தும் உள்ளார்.
கிரீன்லாந்துக்கான பிரெஞ்சு தூதராக Jean-Noel Poirier என்பவர் நியமிக்கப்பட உள்ளார். அவர், முன்பு வியட்நாமுக்கான பிரெஞ்சு தூதர் பொறுப்பு வகித்தவர் ஆவார்.




