கொலம்பியாவில் விமான விபத்து: எம்.பி. உட்பட 15 பேர் உயிரிழப்பு

 கொலம்​பி​யா​வில் நிகழ்ந்த விமான விபத்தில் எம்​.பி. உட்பட 15 பேர் உயி​ரிழந்​தனர். தென் அமெரிக்க நாடான கொலம்​பி​யா​வின் வடகிழக்​கில் நோர்டே டி சான்​டாண்​டர் மாகாணம் உள்​ளது.

இதன் தலைநகர் குகட்​டா​வில் இருந்து மலைகளால் சூழப்​பட்ட ஒகானா நகரை நோக்கி சிறிய விமானம் நேற்று முன்​தினம் காலை​யில் உள்​ளூர் நேரப்​படி 11:42 மணிக்கு புறப்பட்​டது.

கொலம்​பியா அரசின் சட்டேனே விமான நிறு​வனத்​துக்கு சொந்​த​மான இந்த விமானத்​தில் டியோஜெனெஸ் குயின்​டெரோ என்ற எம்​.பி. உள்​ளிட்ட 13 பயணி​களும் 2 விமானிகளும் இருந்​தனர். இந்த விமானம் ஒகானா சென்றடைய சுமார் 40 நிமிடங்​கள் எடுத்துக்​கொள்​ளும்.

இந்​நிலை​யில் விமானம் புறப்​பட்ட சில நிமிடங்களி​லேயே அதனுடன் விமானப் போக்​கு​வரத்து கட்​டுப்​பாட்டு மையம் தொடர்பை இழந்​தது. இதையடுத்து அந்த விமானம் கொலம்​பி​யா​வின் வடகிழக்கு கிராமப்​புறத்​தில் விழுந்து நொறுங்​கியது தெரிய​வந்​தது. உடனே அங்கு மீட்​புக்​குழு அனுப்பி வைக்​கப்​பட்​டது. இந்​நிலை​யில் விமானத்​தில் பயணம் செய்த எம்​.பி. குயின்​டெரோ உள்ளிட்ட 15 பேரும் விபத்​தில் உயி​ரிழந்​தனர்.