சீனாவின் 42வது தென்துருவ ஆய்வு குழு, Xue Long (ஷுயே லுங்) துருவ ஆய்வுக் கப்பலுடன் ஏப்ரல் 9ஆம் திகதி Shanghai மாநகரை பாதுகாப்பாக சென்றடைந்தது.
இந்த ஆய்வு பயணத்தின் போது, குறித்த கப்பல் சுமார் 160 நாட்கள் கடலில் பயணித்து, மொத்தமாக 34,000 கடல் மைல்கள் தூரத்தை கடந்துள்ளது. இந்த பயணம், தென்துருவப் பகுதிகளில் அறிவியல் ஆய்வுகள், காலநிலை மாற்றம் தொடர்பான தரவுகள் சேகரிப்பு உள்ளிட்ட முக்கிய பணிகளை உள்ளடக்கியதாகும்.
இதேவேளை, Xue Long 2 (ஷுயே லுங்-2) எனப்படும் மற்றொரு துருவ ஆய்வுக் கப்பல் தொடர்ந்து தனது ஆய்வு பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த கப்பல் மே மாதத்தின் பிற்பகுதியில் ஷாங்காய் மாநகருக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சீனாவின் தென்துருவ ஆய்வு முயற்சிகள், உலகளாவிய காலநிலை மாற்றம், கடல் சூழல் மற்றும் பனிப்பாறை மாற்றங்கள் தொடர்பான ஆய்வுகளுக்கு முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றன.







